Apply Duplicate Ration Card Online: உங்களது குடும்ப அட்டை தொலைந்து விட்டதா அதை எப்படி புதிதாக பெறுவது என்பதை பற்றி தெரியாமல் மிகவும் கடினப் படுகிறீர்களா? அப்படி என்றால் இனிமேல் நீங்கள் கஷ்டப்படத் தேவையில்லை.

ஆமாம் என்னுடைய குடும்ப அட்டை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொலைந்துவிட்டது அதனை நான் எப்படி 15 நாட்களுக்குள் புதிதாகப் பெற்றுக் கொண்டேன் (Apply Duplicate Ration Card) என்பதைப் பற்றி தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்கு நீங்கள் பெரிதாக எந்தவித தொகையும் பயன்படுத்த தேவையில்லை. வெறும் 50 ரூபாய் உங்களிடம் இருந்தால் போதுமானது.
வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் மிக எளிமையாக Duplicate Ration Card உங்களால் Apply செய்ய முடியும்.
எனவே எந்த ஒரு கவலையும் இல்லாமல் இந்த பதிவை முழுமையாக படியுங்கள், இறுதியில் கண்டிப்பாக நீங்கள் சந்தோஷமாக செல்வீர்கள் என்பதை நான் உறுதி அளிக்கிறேன்.
How to Apply Duplicate Ration Card in TamilNadu
Step 1: முதலாவதாக ரேஷன் கார்ட் பற்றிய அனைத்து தகவல்களுக்கும் நீங்கள் tnpds.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

Step 2: அடுத்ததாக இந்த வலைதளத்தின் வலது பக்கத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை என்ற தனிப்பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் உள்ள “நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க” என்ற அம்சத்தை தேர்வு செய்யவும்.

Step 3: அடுத்ததாக உங்களது குடும்ப அட்டையில் நீங்கள் இணைக்கப்பட்டிருந்த மொபைல் நம்பரை பதிவிடவும்.

Step 4: பிறகு கீழே உள்ள Captcha Code டைப் செய்து பதிவு செய் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 5 : இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணுக்கு 7 இலக்க ஒரு முறை கடவுச்சொல் SMS (Short Message Service) மூலமாக வரும். அதை சரியாக உள்ளீடு செய்து பதிவு செய் என்ற பொத்தானை அழுத்தவும்.

Step 6: அடுத்ததாக, புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை நீங்கள் படித்த பிறகு பணம் செலுத்த வேண்டும்.

Step 7: பின்பு SBI (State Bank of India) வலைதளத்தின் மூலமாக ₹50 ரூபாய் உங்களால் எந்த வழியில் பணம் செலுத்த முடியுமோ அதன்வழியாக எளிமையாக பணம் செலுத்தலாம்.

குறிப்பு: இதில் நகல் குடும்ப அட்டை பெறுவதற்கான விலை ரூபாய் 20 மட்டுமே மீதமுள்ள 30 ரூபாய் உங்களது நகல் குடும்ப அட்டை தபால் மூலமாக உங்கள் வீடு தேடி வருவதற்கான அஞ்சல் தொகையாகும்.
நீங்கள் பணத்தை செலுத்தி முடித்த பிறகு உங்களுக்கு ஒரு குறிப்பு எண் (Reference Number) வழங்கப்பட்டிருக்கும் அதனை கண்டிப்பாக நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், அப்போதுதான் உங்களது நகல் குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களது குடும்ப அட்டை நகல் விண்ணப்பிப்பதற்கான பணத்தை நீங்கள் செலுத்திய நாளிலிருந்து 15 – 30 நாட்களுக்குள் உங்களுக்கு தபால் (Indian Post) மூலம் உங்களது குடும்ப அட்டை அனுப்பப்படும்.
30 நாட்களுக்கும் மேல் உங்களது நகல் மின்னணு குடும்ப அட்டை உங்கள் வீடு தேடி வரவில்லை என்றால் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டு வைத்துள்ள குறிப்பு எண்ணை பயன்படுத்தி உங்களது அத்தை எங்கே உள்ளது என்று தகவலை நீங்கள் எளிமையாக பார்க்க முடியும்.
How to Check Duplicate Ration Card Status
- tnpds.gov.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.
- இந்த வலைதளத்தில் வலது புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிய என்ற அம்சத்தை Clickக் செய்யவும்.

- பிறகு உங்களது குறிப்பு என்னை அதில் உள்ளிட்டு பதிவு செய் என்ற பொத்தானை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களது நகல் மின்னட்டை எங்கே உள்ளது தபால் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
Conclusion
இந்த பதிவின் மூலம் உங்களது தொலைந்து போன குடும்ப குடும்ப அட்டையை உங்கள் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு திரும்ப பெறலாம் என்பதை பற்றி தெளிவாக கூறியுள்ளேன் என்று நம்புகிறேன்.
இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் எனது மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.